விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக இதுவரை 8 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ககன்யான் திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய ராக்கெட்டில் நமது விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாகத் திரும்பக் கொண்டு வருவதுதான் எனவும், இதற்கான ராக்கெட் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் அறிவுரைப்படி 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் எனக் கூறிய அவர், மொத்தம் ஐந்து தொகுதிகளாக அமைக்கப்படும் இந்த நிலையத்தின் முதல் தொகுதி. 2028ல் விண்ணுக்கு அனுப்பப்படும் என்றார்.
















