தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க திமுகவுக்கும், தவெகவவுக்கும் போட்டி நடைபெறுவதாக பாஜக இளைஞரணி மாநில தலைவர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கோவை கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பாஜகவின் இளைஞரணி மாநில தலைவர் சூர்யா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக திமுகவுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் போட்டி நிலவுவதாகவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ள திமுக அரசு மீது மக்கள் கோபமாக இருப்பதாகவும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
















