நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சிக்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், சில அரசியல் மற்றும் கருத்தியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது
தங்களுக்கு விருப்பமில்லாத தீர்ப்புகள் வந்தால், நீதித்துறையை அவமதித்து அச்சுறுத்த முயல்வது தொடர்கதையாகி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது,
நீதிபதிகளை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கச் செய்ய பதவிநீக்கம் மாதிரியான அச்சுற்றுத்தலை பயன்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் குறிப்பிடப்ட்டுள்ளது.
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவிநீக்க முயற்சி நீதித்துறையின் கண்ணியத்திற்கும் சுயாட்சிக்கும் எதிரான தாக்குதல் என்றும், நீதிபதிகள் தங்களின் சத்தியத்திற்கும் இந்திய அரசியலமைப்பிற்கு மட்டுமே பொறுப்பானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசியல் அழுத்தத்திற்கோ கருத்தியல் அச்சுறுத்தலுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல நீதிபதிகள் என்றும், சட்டத்தின் ஆட்சியின் கீழ் வெளியாகும் தீர்ப்புகள் மேல்முறையீடுகளின் மூலமாக மட்டுமே முறையிட வேண்டுமே தவிர அரசியல் இணக்கமின்மைக்காக பதவிநீக்க அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















