திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அனுராக் தாக்கூர், மலையின் உச்சியில் தீபம் ஏற்ற போராடிய பக்தர்கள் மீது திமுக அரசாங்கம் தடியடி நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
“இந்தியாவில் ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிரான ஒரு சின்னமாக மாறியுள்ள மிக முக்கியமான ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக அமைச்சர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.என்றும் அவர் சாடினார்.
திமுக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியலமைப்பின் 25வது பிரிவின் மீறல் என்று அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.
“இது மத உணர்வுகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் கடுமையான மீறலாகும்,” என்று அவர் கூறினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தாக்கூர் கோரியதுடன், இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















