மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை எவ்வாறு தமிழகத்திற்கு பாதகமாக இருக்கும் என்பதை விளக்கி மத்திய நீர்வளக் குழுமத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
















