திருவண்ணாமலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமான பெண்கள் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர்.
மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக நண்பகல் ஒரு மணிக்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் பள்ளி பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 5 மணி நேரத்திற்கும்மேல் தாமதம் ஆனதால் அதுவரை பெண்கள் காக்க வைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்த பெண்கள், நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அத்துடன் தனியார் பள்ளி பேருந்துகள், மாணவர்களை அழைத்துச் செல்ல புறப்பட்டதால் நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
















