இந்திய பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்- யை இந்தியா கொள்முதல் செய்வதாகக் கூறி, இந்திய இறக்குமதி பொருட்களுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி வித்தார்.
இதனிடையே இந்திய அரிசிகளுக்கும் கூடுதலாக வரி விதிக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்தநிலையில் அந்நாட்டு எம்பிக்களான டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், அதிபர் ட்ரம்ப் அவசர சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள வரிக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
அதிபர் ட்ரம்ப் விதித்த இவ்வரிகளால் இந்தியா – அமெரிக்கா உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற மாகாணங்கள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தொடர்பு உடையவை எனவும் இந்த வரியினால் அந்த மாகாண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
















