திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்திப் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இவரது உத்தரவைப் பின்பற்றாத தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தித் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அளித்து உத்தரவிட்டது.
அதன்படி நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
















