இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானின் ISI-யின் போதைப் பொருள் கடத்தல் ஹவாலா நெட்வொர்க்கைச் சேர்ந்த ஐந்து பேரை NIA மற்றும் ஹரியானாவின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த செப்டம்பர் 16ம் தேதி டெல்லியில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழுத் தலைவர்களின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நபர்களை நாடு கடத்தி இந்தியச் சட்டத்துக்கு முன் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார். மேலும், வெளிநாட்டு குற்றவாளிகளை மீண்டும் கொண்டுவருவதற்கு போதைப்பொருள் எதிர்ப்புப் பணிக்குழு, NCB, CBI மற்றும் மாநில காவல்துறை இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
போதைப்பொருட்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், பயங்கரவாதம் மற்றும் MOB violence குற்றங்களுக்கும் எதிராக ஒரு வலிமையான செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் ஹரியானாவின் சிறப்பு புலனாய்வுக் குழு, ஹரியானா மற்றும் பஞ்சாப் முழுவதும் பாகிஸ்தானின் ISI ஆதரவுடன் செயல்படும் ஹவாலா நெட்வொர்க்கைக் கண்காணித்து வந்தனர். கடந்த நவம்பர் 25ம் தேதி, ஹரியானாவின் நுஹ் அருகே தாவோருவில் உள்ள சோஹ்னா புறவழிச்சாலையில் இருந்து பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்த ரிஸ்வான் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு மடிக்கணினி மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன. உள்நாட்டில் குழப்பத்தை விளைவித்தல், போதை பொருள் கடத்தல் போன்ற இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தானின் ISI- யிடமிருந்து ஹவாலா மூலம் நிதி பெற்றதாக ரிஸ்வான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரிஸ்வானிடம் நடத்திய விசாரணையில், முஷாரஃப் என்கிற பர்வேஸை நூஹ் நகரில் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கறிஞராகப் பணியாற்றும் இருவரும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ரிஸ்வானுடன் தொடர்பில் இருந்த பஞ்சாப் ஜலந்தரைச் சேர்ந்த இனிப்பு வியாபாரி அஜய் அரோராவை கைது செய்தனர்.
ஹவாலா பண பரிவர்த்தனைகளை அஜய் அரோரா, நிர்வகித்ததாகக் கூறப்படுகிறது. ஹவாலா பணப் பரிமாற்றத்துக்காக அஜய் அரோரா குடும்பத்தினர் நடத்தி வந்த இனிப்புக்கடையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அஜயின் வீட்டு லாக்கரில் இருந்து 55000 ரூபாயை கைப்பற்றியுள்ளனர். அஜய்க்கு மூன்று முதல் நான்கு தவணைகளில் 34 லட்சம் கொடுத்ததாக ரிஸ்வான் ஒப்புக்கொண்டதை அடுத்து ஹவாலா பணத்தின் விநியோக சங்கிலியையும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தீவிர விசாரணைக்குப் பின், ரிஸ்வான் பல சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளைச் செய்த அமிர்தசரஸைச் சேர்ந்த சந்தீப் சிங் என்ற ககன், அமன்தீப் சிங் மற்றும் ஜஸ்கரன் சிங் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஹவாலா நெட்வொர்க் மூலம் பாகிஸ்தானில் இருந்து ISI ஏஜெண்ட்கள் மூலம் அனுப்பப்பட்ட பணம் பஞ்சாப் முழுவதும் போதை பொருள் கடத்தலுக்கு விநியோகிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. பொதுவாகவே ஹரியானாவின் நூஹ் நகர் ஒரு குட்டி பாகிஸ்தான் போலவே இருக்கிறது. பசு கடத்தல்காரர்களின் கோட்டையாகவே நுஹ் மாவட்டம் உள்ளது.
2023ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி நடந்த இந்துகள் ஊர்வலத்தில் இஸ்லாமிய வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர், இந்துகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையின் போது கோடிக்கணக்கான மதிப்புள்ள பொது மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இங்கே இயங்கி வரும் ஜமாத் உலமா-இ-ஹிந்த் அமைப்புக்கு ஏராளமான நன்கொடைகள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன.
மேலும், ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலமும் வருமானத்தைப் பெறுகிறது இந்த அமைப்பு. எனவே நூஹ் நகரில் பாகிஸ்தானின் ISI-யின் ஏஜெண்டுகள் நிறைய பேர் இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது உண்மையாகி இருக்கிறது. நக்சல் இல்லாத பாரதம் என்பது போல போதை பொருள் இல்லாத பாரத்தையும் உருவாக்க பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
















