டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரசார பயணத்தின்போது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வழங்கினார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகம் தொடர்பான மனுக்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வின்போது பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
















