பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் அசாமில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி குலேந்திர சர்மா சோனித்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் முக்கியமான ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
குலேந்திர சர்மாவின் மடிக்கணினி மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், குலேந்திர சர்மாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















