திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்த மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், UDF, LDF ஆகியவற்றால் கேரள மக்கள் வெறுப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்துள்ள வெற்றியானது, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், கேரள மக்களுக்கு நல்லாட்சி வழங்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.
மேலும், கேரளாவை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றப் பாஜகவால் மட்டுமே முடியும் என மக்கள் நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
















