ஜாக்டோ – ஜியோ ஊழியர்கள் சார்பில் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியும், எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் எத்தனை அடக்குமுறைகளைக் கையாண்டாலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
















