முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் மகனுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் திரையுலக நட்சத்திரங்களான நடிகர்கள் சந்தானம் மற்றும் சரத்குமார் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, பாமக தலைவர் அன்புமணி மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
















