நைஜீரியாவில் மத தலைவர் ஒருவர் மறைந்த தனது தாயாரின் உடலை 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க பேழையில் அடக்கம் செய்தது வைரலாகி உள்ளது.
நைஜீரியாவின் நபி எரேமியா ஃபூஃபின்ஷன் பிரபலமான போதகராகவும், மதத் தலைவராகவும் உள்ளார். அவரின் 104 வயதான தாயார் மாமா அசேது என்பவர் உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான பேயல்சா மாகாணாத்தில் உள்ள அலீபிரி கிராமத்தில் நடைபெற்றது. அப்போது மறைந்த தனது தாயின் உடலை 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க பேழையில் வைத்து நபி எரேமியா நல்லடக்கம் செய்தார்.
தாய்லாந்து போன்ற நாடுகளில் பணக்காரர்கள் மற்றும் அரச குடும்பங்கள் மட்டுமே இதுபோன்ற விலையுயர்ந்த பேழைகளை பயன்படுத்தப்படுகின்றன.
உலகளவில் பிரபலம் வாய்ந்த போதகரான எரேமியா, தனது தாயாருக்கு இறுதி மரியாதையாக இந்த விலையுயர்ந்தப் பேழையைப் பயன்படுத்தியுள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















