பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசியவர்,
“பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது என்றும் அவரின் தபால் தலையை வெளியிடப் பிரதமர் மோடிதான் காரணம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
திருச்சி உள்ளிட்ட பகுதிகளை ஆண்ட முத்தரையர் 14 போர்களில் பங்கேற்று தோல்வியை சந்திக்கவில்லை என்றும் நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்று கூறிய சி.பி.ராதாகிருஷ்ணன் ஆங்கிலேய ஆட்சியில் இழந்த பெருமைகளை பிரதமர் மோடி மீட்டெடுத்து வருகிறார் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
















