விருதாச்சலத்தில் சீமானை பார்த்து ஒழிக என்று கோஷம் எழுப்பிய திமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து காரில் ஏறியபோது திமுக பிரமுகர் ஒருவர், சீமானை பார்த்த திட்டியதாகக் கூறப்படுகிறது.
உடனே, காரை விட்டு இறங்கி வந்த சீமான், திமுக பிரமுகரைத் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, உடன் இருந்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் திமுக பிரமுகரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, திமுக பிரமுகரைக் கண்டித்து நாதகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும், சீமானை அவதூறாகப் பேசிய திமுக பிரமுகர் மீது காவல் நிலையத்தில் நாதகவினர் புகார் மனு அளித்தனர்.
















