பாஜகவின் தேசிய செயல் தலைவராகப் பீகாரை சேர்ந்த நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிதின் நபின் பீகார் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றிக்குப் பின், தொடர்ச்சியாக நான்கு முறை பங்கிபூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் சத்தீஸ்கர் மாநில பாஜக பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவரை பாஜக தேசிய செயல் தலைவராக நியமித்து பாஜக நாடாளுமன்ற குழு அறிவித்துள்ளது.
















