வெகு விமரிசையாக நடைபெற்ற விஜய் திவாஸ் நிகழ்ச்சி!
Oct 27, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெகு விமரிசையாக நடைபெற்ற விஜய் திவாஸ் நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 11:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் விஜய் திவாஸ் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக வங்கதேசம் என்ற நாடு உருவாகியது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ராவில்  விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, 1971 ஆம் ஆண்டு போரின் போது எடுக்கப்பட்ட ஒருசில காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்களையும், வங்கதேசம் விடுதலை பெற்று புதிய நாடாக உருவானதையும் நாடகமாக அரங்கேற்றினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கர்னல் மலையப்பன், போரின் போது ரேடியோ தொடர்பு தான் இருந்ததாகவும், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தி, உருது, பெங்காலி ஆகியவற்றை தான் கண்காணித்ததாகவும் கூறினார்.

மேலும், தமிழில் பேசுங்கள், அவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்று இந்திய ராணுவம் தெரிவித்ததாகவும், அனைத்து தகவல்களும் தமிழிலேயே இருந்ததால் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பேட்டியளித்த முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் இந்திரபாலன், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் வெற்றி என்பது ஒப்பிட முடியாத ஒன்று என்றும், உலக வரலாற்று போரின் முடிவில் ஒரு புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

போர் நிறுத்தத்திற்காகப் பாகிஸ்தானை கையெழுத்திட வைத்ததாகவும், ஆனால் வங்கதேசத்தின் தற்போதைய நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Tags: newsindian armyvijay diwasVijay Diwas was a grand event
Share
Tweet
SendShare
Previous Post

நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிப்பு – சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறல்!

Next Post

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies