கோவை, சூலூர் அருகே யாஷகம் கேட்டு சுற்றித்திரிந்த சிலர் தனியார் நிறுவனத்தில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கணியூர் டோல்கேட் பகுதியில் யாஷகம் கேட்டுச் சுற்றித்திரிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தை நோட்டமிட்டதுடன், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் சுவர்மீது ஏறிக் குதித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்களை சுற்றிவளைத்தனர்.
இவர்கள் யாஷகம் கேட்பது போல் பல்வேறு இடங்களை நோட்டமிட்டதும், பின்னர் திருட முயற்சித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
















