திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடியிருப்பு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
சின்னக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது.
இதற்கு நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து வந்த போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.
















