நாகை மாவட்டம் கோடியக்கரையில் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களைச் சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
நாகையைச் சேர்ந்த ரகு, பிரசன்னா, முத்துவேல், அன்பரசு ஆகியோர்க் கோடியக்கரை அருகே பைப்பர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சூறாவளி காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது. படகு மீது அமர்ந்து 4 பேரும் உயிருக்குப் போராடி கொண்டிருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள், 4 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
















