மக்களைவையில் அறிமுகம் செய்யப்பட்ட உயர்கல்வி ஆணைய மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைப்படி, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவைக் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக அனைத்தும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ்க் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக விக்சித் பாரச் சிக்ஷா அதிக்ஷன் என்ற புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
















