சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் விடுதி அமைப்பதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பிற்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசின் இடத்தை இஸ்லாமியர்களுக்கு வாரித்தருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய குழுக்களால் நிர்வாகிக்கப்படும் ஹஜ் விடுதிகளில் தேச விரோத சதிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கியமான இடத்தில் ஹஜ் விடுதி அமைப்பது, ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளதை உளவுத்துறை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹஜ் விடுதியால் தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
















