இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி செய்து வருகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி செய்து வருகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 17, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி கட்சிகள் செய்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரியும்,   திமுக அரசைக் கண்டித்தும், இந்து முன்னணி சார்பாக,  புதுச்சேரி திருமங்கலம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருமடம், ஸ்ரீலஸ்ரீ கணேச தேசிக சாமிகள் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தீபப் போராட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையில், தர்கா அமைந்திருக்கும் இடம், படிக்கட்டு மற்றும் நெல்லித்தோப்பு பகுதி தவிர, மலை முழுவதும் முருகனுக்குச் சொந்தம், திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சொந்தம் என்று, 1920 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்திலேயே தீர்ப்பு கொடுக்கப்பட்டு, வெவ்வேறு காலகட்டத்தில் அந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் அமைந்திருக்கும் பகுதி, கோவிலுக்குச் சொந்தமானது. இந்த நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த டிசம்பர் 1, 2025 அன்று தீர்ப்பளித்தது என குறிப்பிட்டார்

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தர்கா சார்பாக யாரும் வழக்கு தொடரவில்லை. ஆனால், ஆலய வழிபாட்டு முறைகளை உறுதி செய்ய வேண்டிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது என்றும் அவர் கூறினார்.

அது மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. G.R.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்  வைத்தியலிங்கம் உட்பட, 100 இண்டி கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்களது உண்மையான நோக்கம் இந்து மத எதிர்ப்பு மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில், விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. இந்து சமய வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணிக் கட்சிகள் செய்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், இந்தி கூட்டணிக் கட்சிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். தேர்தல் வரும்போது, இந்த துரோகக் கூட்டம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Thiruparankundram temple.hindu munani protestThiruparankundram case.bjp annamalaithiruparankundram newsannamalaibjp annamalai latestannamalai bjpthiruparankundram rowannamalai speechthiruparankundram protestAnnamalai Press Meetthiruparankundram muruganThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
ShareTweetSendShare
Previous Post

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – மதுரை உயர் நீதிமன்றம்

Next Post

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது – மத்திய அரசு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies