உலகில் 600 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் தான் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிகர சொத்து மதிப்பைக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றது குறிப்பிடத்தக்கது.
















