கனிம வள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், 5 கோடி ரூபாய் அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பதில் என்ன பயன் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
அரசின் நிர்வாகமே பாதிக்கப்படும் அளவிற்கு கனிம வள கொள்ளையர்கள் மாஃபியாக்களாக செயல்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகள் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகம் முழுவதும் சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















