ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்த பதவி தேவையில்லை என தவெக நிர்வாகி அருண்ராஜ் குறித்த கேள்விக்கு அண்ணாமலை ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியில் சேர்ந்ததற்காக நடிகர்களுக்கு ஜால்ரா அடிப்பவன் நான் அல்ல என தெரிவித்தார்.
சினிமா நடிகர்களுக்கு ஜால்ரா அடிப்பதற்காக அரசு பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.
உன்னதமான கோட்பாட்டுக்காக தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் மக்களுக்காக பல பிரச்னைகளை சந்திக்க உள்ளதாகவும், மக்களுக்காக சந்திக்கும் பிரச்னைகளை பெருமையாக கருதுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
















