திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரனுக்கு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முருகப் பெருமானின் தீவிர பக்தர் பூர்ண சந்திரன், திமுக அரசின் இந்து விரோதப் போக்கால், குறிப்பாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் புனித கார்த்திகை தீபத்தை ஏற்ற பக்தர்களை அனுமதிக்க மறுத்ததால், மிகவும் வேதனையடைந்து, இன்று மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துயரச் செய்தி என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்கள் பெற பிரார்த்திக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முருகப் பெருமானின் அனைத்து பக்தர்களும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்குமாறு மனதார கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறை மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம், நீதி வெல்லும் என்றும் எங்கள் நியாயமான கோரிக்கைகள் நிலைநாட்டப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று பக்தர்களை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது, உங்கள் குடும்பம் உங்களைச் சார்ந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















