திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்று கிடக்கும் உயர்கல்வித்துறை - நயினார் நாகேந்திரன்
Aug 25, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்று கிடக்கும் உயர்கல்வித்துறை – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 07:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வித்துறை உயிரற்றுக் கிடக்கிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களில் 12-ல் 40%-க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட ஆசிரியப் பணியிடங்களும், மீதமுள்ள 9 பல்கலைக்கழகங்களில் 15%-40% வரையிலான ஆசிரியப் பணியிடங்களும் காலியாக உள்ளதெனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய தமிழகத்தின் மிகத் தொன்மையான முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பாதிக்குப் பாதி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள தகவல், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான அப்பட்டமான சான்று என்று அவர் தெரிவித்தார்.

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்விக் கூடங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதராமல், தரமான கட்டடங்களைக் கட்டி எழுப்பாமல், போதிய ஆசிரியர்களை நிரப்பாமல், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விளம்பர விழா எடுப்பதற்குத் திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

தனது பிள்ளைக்குப் பதவி கிடைப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு அதில் வெற்றி கண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழக இளைஞர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யாதது ஏன்? படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பும், படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும் உள்ளடங்கிய இவ்விவகாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது? உயர்கல்வித்துறையின் உயிர்நாடியை ஒடுக்கி தமிழக இளைஞர்களின் கல்விக் கனவை சாம்பலாக்குவது தான் திமுகவின் சமூகநீதியா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: bjpDMKMK StalinHigher education sector is lifeless under the Dravidian model regime - Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை – அண்ணாமலை இரங்கல்!

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவித்த உலக நாடுகள் பட்டியல்!

Related News

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies