தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 28, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2026, 07:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு நெருங்கிய நபரான ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்ற, கர்நாடகாவைச் சேர்ந்த . கே. வெங்கடநாராயணனை நியமிப்பதாக ஜோசப் விஜய் அரசு வெளியிட்ட அறிவிப்பு அதிர்ச்சியளிப்பது மட்டுமல்லாமல், பல கேள்விகளையும் எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட வேண்டிய இவ்வளவு முக்கியமான ஒரு பொறுப்பில், தமிழ்நாட்டுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒருவரை எப்படி நியமிக்க முடியும்?

நமது தாய்மொழியான தமிழையோ அல்லது நமது தமிழ்ப் பண்பாட்டையோ முழுமையாக அறியாத ஒருவரால், டெல்லியில் தமிழ்நாடு மக்களின் விருப்பங்களையும் தமிழ்நாடு அரசின் குரலையும் எவ்வாறு திறம்பட எதிரொலிக்க முடியும்?

சட்டம் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரைத் தவிர்த்துவிட்டு, கர்நாடக துணை முதல்வர்  டி.கே. சிவக்குமாரின் நெருங்கிய நண்பரை ஏன் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும்?

அவர்,  விஜய் நடிக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதனாலா? அல்லது காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தின் காரணமா?

மேட்டூர் அணை விவகாரத்தைத் தீர்க்கக் கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, டெல்லிக்குக் கடிதம் எழுதுவதோடு நில்லாமல்இப்போது கூட்டணி கட்சியின் அழுத்தத்திற்குப் பயந்து, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டுத் தமிழர்களின் நலனைப் புறக்கணிப்பதா உண்மையான அதிகாரம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாற்று சக்தி என்று கூறிக்கொண்டு, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டை இவ்வாறு ஏமாற்றுவதற்கு ஜோசப் விஜய்  அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: Film producer Venkata NarayanaTamil Nadu government's Special Representative in Delhi.Nainar Nagendran speechnainar nagendran statementKarnataka Deputy Chief Minister D.K. ShivakumarBJP State President Nainar Nagendran nainar nagendran on eps
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Next Post

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies