மகாகவி பாரதியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென படைப்பாளர்கள் சங்கமம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடந்த திராவிட இயக்கத்தினரின் போராட்ட நிகழ்வு மகாகவி பாரதி இழிவுபடுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்தை சேர்ந்த ‘யூ டூ புரூட்டஸ்’ என்ற சமூகதள நிர்வாகி, மகாகவி பாரதியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழியையும் பாரத நாட்டையும் இரு கண்களாக நேசித்த பாரதியை அவமதிப்பதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என கூறிய படைப்பாளர் சங்கமம்,
பாரதியாரை அவமதித்த கயவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது.
















