அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை நாளை மறுதினம் இஸ்ரோ விண்ணியில் செலுத்தவுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த “ஏஎஸ்டி” நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6 ஆயிரத்து 500 கிலோ எடையில், ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
இது தொலைதுார கிராமங்களுக்கு, அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் , எல்.வி.எம்., 3 ராக்கெட் மூலமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வரும், 24ம் தேதி காலை விண்ணில் ஏவப்பட உள்ளது.
















