தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்தில், மூக்கனூர் ரயில் நிலையம் பழைய இடத்திலேயே அமைய உள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, மூக்கனூர் ரயில் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அதே இடத்தில் இருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனால் இரு தரப்பினரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இறுதியில் மூக்கனூர் ரயில் நிலையம் பழைய இடத்திலேயே இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மை பெற்றது. இதனால் தங்கள் நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாகக் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
















