ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் டாணாக்காரன் இயக்குநர் தமிழின் கதையில் உருவாகியுள்ள சிறை திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படம்குறித்து உரையாடிய நடிகர் விக்ரம் பிரபு, சினிமாவில் வியாபாரம் முக்கியம் என்றாலும் கலைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும், கலைக்கு முன்னுரிமை கொடுத்தால் வியாபாரம் அதன் பின்னால் வரும் எனவும் கூறினார்.
சினிமாவில் மக்களின் ரசனை மாறி வருவதாகவும், வாழ்வியலோடு கலந்த சினிமாவை மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அஜித்தின் புதிய படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரனைப் போல் தானும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், அவர் கேட்டுக் கொண்டால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
















