ராணிப்பேட்டை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நிரந்தர முகாம் குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிக்கப்பட்டு, 36வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணிப்பேட்டையை தனி மாவட்டமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற்றன.
பின்னர், ஆட்சி மாற்றம் காரணமாகப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிரந்தர முகாம் குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை.
மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு நிரந்தர குடியிருப்பு முகாம்களைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டுமென மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















