சென்னையில் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவன ஓட்டுநர்கள் மூலம் இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து பணி மனைகளிலும் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவன ஓட்டுநர்கள் மூலம் இயக்கும் நிகழ்வை, துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகர், வடபழனி, பல்லவன் இல்லம், வியாசர்பாடி உள்ளிட்ட அனைத்து பணி மனைகளிலும் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
















