அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகப் பல திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் மூலம் பயனடைந்த இளைஞர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பயனாளர் ஒருவர் கொரோனா காலகட்டத்தில் அனைத்து மாநிலங்களும் தத்தளித்துக் கொண்டிருந்த போது தங்களுக்கு மட்டும் எப்படி ஆல்பாஸ் போட வேண்டும் என்ற எண்ணம் வந்தது எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் காலம் கடந்துவிட்டால் அதனை திரும்ப அடைய முடியாது என்பதாலும், மாணவர்களின் மனம் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் அந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.
இதைப் போலவே அம்மா உணவகம், விலையில்லா மடிக்கணினி திட்டம் எனப் பயனாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
















