காசாவுக்கு பாகிஸ்தான் படைகளை அனுப்ப வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்திய நிலையில், உள்நாட்டு எதிர்ப்பால் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் செய்வதறியாமல் தவித்து வருகிறார்.
அமெரிக்காவின் முயற்சியால் இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக உள்ள பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளை காசாவிற்கு அனுப்ப வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கை, ஹமாஸை ஆயுதமற்றதாக்கும் செயல் எனவும் பாகிஸ்தான் படைகளை காசாவுக்கு அனுப்ப கூடாதெனவும் அந்நாட்டு மக்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
எனவே இது தொடர்பாக என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனிர் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
















