பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பூர்ண சந்திரன் மனைவிக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் அவரது மறைவுக்கு அனைவர் வீட்டிலும் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
இனிமேலாவது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அரசுத் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியவர் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற முடிவுகளை கைவிட வேண்டும் என்றும் பூர்ண சந்திரன் குடும்பத்துக்குப் பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















