உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் வீட்டிற்குள் கரடிகள் புகுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உத்தர்காசியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சுறுத்தி வருவதாகத் தொடர் புகார் எழுந்து வருகிறது.
அந்த வகையில் வனப் பகுதியிலிருந்து குட்டிகளுடன் வெளியேறிய கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த கரடிகள் அங்கு வைக்கபட்டிருந்த பொருட்களைச் சேதப்படுத்தின.
பின்னர் கரடிகள் ஒன்றை யொன்று தாக்கிக் கொண்டன. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர்ந்து கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், வன விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர தீர்வு அளிக்க வேண்டுமென்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















