SIR பணியில் இறந்தவர்கள் மற்றும் இடமாறியவர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இறந்தவர்கள், இடமாறியவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், உயிரோடு உள்ளவர்கள் நீக்கப்படவில்லை என்றும் கூறினார்.
திமுகவினர் ஏற்கனவே கள்ள ஓட்டை சேர்த்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை என்றால் நீதிமன்றத்தை திமுக நாடலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஒரு லட்சம் பேர் தப்பான வாக்கு செலுத்தி முதல்வர் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.
திமுகவுக்கும், தவெக-வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு ஐயோ பாவம் என பதிலளித்தார்.
இதற்கு மேல் என்ன சொல்ல முடியும். இதுவரை எந்த தேர்தலிலும் தம்பி விஜய் போட்டியிடவில்லை என்றும், அண்ணன் ஒருவர் (செங்கோட்டையன்) சேர்ந்துள்ளார். அவர் சேர்ந்ததால் அம்மாவுடன் இருந்துது போல் நினைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். அண்ணன் செங்கோட்டையன் பாவம் அவருக்கு வேறு வழி இல்லை என்றும் நயினார் குறிப்பிட்டார்.
















