ராணிப்பேட்டையில் தொழுகைக்கு செல்லக்கூடாது எனக்கூறி பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டி தற்கொலை செய்த இளைஞர் பூரண சந்திரனின் ஆன்மா சாந்தியடைந்த வேண்டும் என மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் வேலூர் இப்ராஹிம் சிறப்பு ஜும்மா தொழுகைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தத் தொழுகையில் பங்கேற்பதற்காக பள்ளி வாசலுக்குச் சென்ற அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
















