கோவை நல்லாம்பாளையத்தில் இளைஞர் உயிரிழப்புக்கு நீதிகேட்டு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லாம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், சாலை குண்டும் குழியுமாக இருந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
அரசின் அலட்சியமே இளைஞர் பலியாக காரணம் என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் மற்றும் பாஜகவினர், இளைஞர் இறப்புக்கு நீதிகேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
















