கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் பனிமூட்டம் தொடர்ந்து பார்வைத்திறனைக் குறைப்பதால் பெரும் விமானப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி விமான நிலையத்துக்கு வர வேண்டிய 66 விமானங்களும் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
















