கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மால் ஒன்றில் 75 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதைத் தொடர்ந்து, பெங்களூரு நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஹெப்பல் பகுதியில் உள்ள மால் ஆஃப் ஆசியாவில் பிரமாண்டமான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு வைக்கப்பட்டுள்ள 75 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
















