கடலுக்குள் மாயமான மீனவரை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர், ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் அடுத்த சிவகாமி நகரை சேர்ந்த கணேசன் என்பவர், நேற்று கடலுக்குச் சென்றபோது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து மாயமானார்.
கணேசனை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், டோக்கன் வழங்கும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
கணேசனை கண்டுபிடிக்கும் வரை கடலுக்குச் செல்ல யாருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
















