ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களுக்கு, உலகெங்கிலும் வசிக்கும் ஹிந்துக்கள் உதவ வேண்டுமென தெரிவித்தார்.
ஹிந்துக்கள் மக்களுக்கான ஒரே நாடு இந்தியா என குறிப்பிட்ட அவர், ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என கூறினார்.
சமூக மாற்றத்திற்காக உழைத்து வரும் RSS, இஸ்லாமியத்திற்கு எதிரானது அல்ல என தெரிவித்த மோகன் பகவத், இதில் சந்தேகம் உள்ளவர்கள் RSS அமைப்பின் செயல்பாட்டை நேரடியாகவே வந்து பார்க்கலாம் என கூறினார்.
இந்தியாவை தனது தாய் நாடாக கருதுபவர்கள், அதன் கலாசாரத்தை பாராட்டுவார்கள் என குறிப்பிட்ட மோகன் பகவத், உலகில் உள்ள வேறு எந்த தன்னார்வ அமைப்பும் RSS-ஐ போல எதிர்ப்பை சந்தித்ததில்லை என்றும் கூறினார்.
















