பெங்களூருவில் வசித்து வரும் கனடா நாட்டு டிஜிட்டல் creator-ஆன Caleb Friesen என்பவர், சிதிலமடைந்த நடைபாதையில் அவரது 5 வயது மகனை நடக்க வைத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெங்களூருவின் அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாகப் பெங்களூருவில் வசித்து வரும் அந்தக் கனடா டிஜிட்டல் கிரியேட்டர், இந்திரா நகர் பகுதியில் அடிப்படை கட்டமைப்புகள் எந்த அளவுக்கு மோசமாக மாறி இருக்கிறது என்பதற்கு சாட்சியாக அந்த வீடியோவைப் பதிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் பல்வேறு அடிப்படை குறைபாடுகள் இருந்தாலும், தனது சொந்த நாட்டுக்குச் செல்லமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ள Caleb Friesen, தனது மகன் வளர்ந்து பெரியவனாக ஆகும் போது பெங்களூருவின் கட்டமைப்பு மேலும் வலுப்பெறும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
















