வங்கதேச வன்முறை சம்பவத்தில் தூதரக செல்வாக்கை பயன்படுத்தலாமென சசிதரூர் யோசனை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி இறந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது.
பத்திரிகை அலுவலகங்களுக்குத் தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க யூனுஸ் தலைமையிலான அரசுக்கு இந்தியா வலியுறுத்தலாம் என கூறியுள்ளார்.
















